Monday, February 20, 2006

கேட்டதில் பிடித்தது...


தமிழ் திரைப்படங்களில் வரும் பாடல்களை, தமிழ் தெரியாத பின்னனி பாடகர்கள் பாடும் பொழுது, பாடல் வரிகள் எல்லோரையும் சென்றடைவதில்லை.

இதோ அதற்கான ஒரு சான்று,

"அலைபாயுதே" என்னும் திரைப்படத்தில் வரும் "சிநேகிதனே" என்னும் பாடல். இந்த பாட்டின் ஆரம்பத்தில் வரும் அனுபல்லவி இதோ...

"நேற்று முன் இரவில் - உன்
நித்திலப்பூ மடியில்
காற்று நுழைவதுபோல்
உயிர் கலந்து களித்திருந்தேன்.

இன்று பின் இரவில்
அந்த ஈர நினைவில்
கன்று தவிப்பதுபோல்
மனம் கலங்கி புலம்புகிறேன்.

கூந்தல் நெளிவில்
எழில் கோலச் சரிவில்
கர்வம் அழிந்ததடி - என்
கர்வம் அழிந்ததடி.

சிநேகிதனே...சிநேகிதனே....."

கவிப்பேரரசு வைரமுத்து வின் "பெய்யன பெய்யும் மழை" என்னும் கவிதை தொகுப்பில் "மெய்பொருள்" என்னும் தலைப்பில் இந்த வைர வரிகள் உள்ளது.

இந்த வரிகளை மனதில் கொண்டு, பாடலை இனியொருமுறை கேளுங்கள். பாடலின் சுகம் புரியும்.

5 comments:

Anonymous said...

மிகவும் நல்ல தகவல் இத்தனை நாட்களாய் வேறு ஏதோ வார்தைகளை நிரப்பி இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பேன் இத்தனைக்கும் பாடகர் ச்ரினிவாஸ் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் தாசன் said...

"சிவா" அவர்களே..

பதிவுக்கு வந்தமைக்கு நன்றி..

//மிகவும் நல்ல தகவல்//

மிக்க நன்றி...

//பாடகர் ச்ரினிவாஸ் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது//

பிழையை சுட்டி காட்டியமைக்கு மிக மிக நன்றி.

santha said...

நல்ல வரிகள். நல்ல பதிவு.

santha said...

நித்திலப்பூவை பற்றி சிறு விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

தமிழ் தாசன் said...

சாந்தகுமார் அவர்களே..

பதிவுக்கு வந்தமைக்கு நன்றி..

நித்திலம் .... துய்மையான முத்து

நித்திலப்பூ மடியில்.... துய்மையான முத்துக்களை போன்றதொரு மென்மையான மடியில்.

கவிஞரின் கற்பனை இதுவாகத்தான் இருக்குமென்பது என்னுடைய கற்பனை.. ஹி ஹி:)