Friday, February 17, 2006

ஆப்பிள்...

"தலைமுறை" என்னும் பதிவின் தொடர்ச்சியாக என் சிந்தனைக்கு எட்டிய ஒரு செய்தி.

சர் ஐசக் நியூட்டன், ஒரு நாள் ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்தபோது அவரது தலையில் ஒரு ஆப்பிள் விழுந்ததாகவும், அந்த நிகழ்வே அவருக்கு புவியீர்ப்புவிசையை கண்டறிய தூண்டுகோலாக இருந்தது என்றும் நம்மில் பலர் அறிந்த செய்தி. ஆனால் இது முற்றிலும் ( மிகைப்படுத்தப்பட்ட) தவறான செய்தி என்றும், நியூட்டன் ஒருபோதும் அப்படி கூறியதில்லை என்றும் "ஸ்டீபன் ஹாக்கிங்" என்னும் இயற்பியல் வல்லுனர் கூறுகிறார்.

( The story that Newton was inspired by an apple hitting his head
is almost certainly apocryphal. All Newton ever said was that the
idea of gravity came to him as he sat "in a contemplative mood"
and was "occasioned by the fall of an apple")


courtesy: "A Brief History Of Time" by Stephen Hawking.

அதாவது, நியூட்டன் தான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த பொழுது புவியீர்ப்புவிசையை கண்டறிந்தார் என்றும், அச்சமயம் அவரது தலையில் ஆப்பிள் விழுந்தது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகிறார்.

இதன் மூலம் நான் அறியப்படும் செய்தி, தலையில் ஆப்பிள் விழுந்ததால் புவியீர்ப்புவிசை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், புவியீர்ப்புவிசை கண்டுபிடிக்கப்பட்டபோது ஆப்பிள் விழுந்தது என்பதாகும்.



5 comments:

மாயவரத்தான் said...

About this blog in today's dinamalar...

http://www.dinamalar.com/2006Feb23/flash.asp

About this in Thenkoodu's Indraya Valaipadhivu..

http://www.thenkoodu.com

தமிழ் தாசன் said...

மாயவரத்தான்... அவர்களே...

நீங்கள் தந்த செய்திகண்டு மகிழ்சியடைந்தேன்..
மிக மிக நன்றி.

தமிழ் தாசன் said...

Hi selva,

thanks a lot da...

J S Gnanasekar said...

இதைப் படித்தபோது யாரோ எழுதிய ஒரு கவிதை சிந்தனையில் வந்தது. அது,

"நல்லவேளை
நியூட்டன் அந்நேரம்
பசியுடன் இல்லை.
இல்லாவிட்டால்
ஆப்பிளைச்
சாப்பிட்டு இருப்பார்"

இப்போது "பிப்ரவரி மாதம்" என்ற ஒரு கதை எழுதிக் கொண்டு இருக்கிறேன். அதில் நியூட்டன் பற்றி ஒரு நிகழ்ச்சியை மேற்கோள் காட்டி இருக்கிறேன். அநேகமாக நாளை என் தளத்தில் அந்தக் கதை இருக்கும். அறிவியல் ஆர்வம் இருப்பதால் இதைச் சொல்கிறேன். படித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

-ஞானசேகர்

தமிழ் தாசன் said...

ஞானசேகர் அவர்களே...

நிச்சயமாக...