Tuesday, September 18, 2007

என்னவளுக்காக ஒரு வெண்பா...

முதன் முதலாய் ஒரு
மரபுக் கவிதை இயற்றிட,
பாடுபொருள் நான் தேட,
என்னவள் முறைத்திட,
இதோ அவளுக்காக, நேரிசை வெண்பாவில்...


என்னவள்

பாரியின் தேர்கொண்ட மெல்லிடையாள் என்னவள்
தேரில் வரக்கண்டு கர்வமுற்றாள் - என்னவளோ
வெற்றிவிழா யாருக்குச் சொந்தமென கேட்டிட
போற்றினேன் முல்லையைப் பொய்த்து

6 comments:

தமிழ் தாசன் said...

முதல் முயற்சி என்பதால், என்னையறியாமல் பிழை இருக்க வாய்ப்புள்ளது...

பிழை இருந்தால் சுட்டிக் காட்டவும்...

நன்றி...

FloraiPuyal said...

வெண்பா தெரியும். அதென்ன வென்பா?

தமிழ் தாசன் said...

floraiputal அவர்களே..

பிழையை சரிசெய்து விட்டேன்..

மிக்க நன்றி..

ஜீவா (Jeeva Venkataraman) said...

தளைகள் தட்டாமல் வந்திருக்கிறது, வாழ்த்துக்கள்!

selva ganapathy said...

maplai...superda....good to see you writing back.. keep going!!!

Mr.பொது ஜனம்... said...

கவிதை super.காதல் கதையின் அடுத்த பாகம் எப்போ?