Friday, September 07, 2007

இது ஒரு காதல் கதை - பாகம் 2.



இது ஒரு காதல் கதை - பாகம் 1.


---மூன்று வருடங்களுக்கு முன்---

திருச்சி பிள்ளையார் கோவில் தெருவில்

"ட்ரிங்... ட்ரிங்... "

வசந்த் வீட்டு வாசலில் சுந்தர் தன் சைக்கிளுடன்.

"டேய் வசந்த், நீ இன்னும் ரெடி ஆகலையா?"..

"ஒரு நிமிஷம் டா, இதோ வந்துட்டேன்"..

"camera எடுத்துட்டியாடா?"..

"எடுத்தாச்சுடா "..

"நம்மதான் கடைசினு நினைக்கிறேன்.எல்லோரும் வந்திருப்பாங்க.சீக்கிரம் வா"..

"நீ சைக்கிளை இங்க விடு, நாம பைக்-ல போலாம்"..

"பைக்-லயா?..அப்பா ஊருக்கு போயிருக்காங்களா?.. சொல்லவே இல்ல.."

"அடுத்த தடவை சொல்ல சொல்றேன்.. நீ பைக்ல ஏறு.."

பைக்-கை ஸ்டார்ட் செய்த வசந்த, வாசலில் நின்ற அம்மாவிடம்,

"அம்மா, நாங்க போய்ட்டு வர்றோம், கொஞ்சம் லேட்டாதான் வருவோம்"..

"பார்த்து போய்ட்டு வாங்க.. பைக்-ல கொஞ்சம் மெதுவா போங்கப்பா.."

பைக், அம்மாவின் பார்வையில் இருந்து மறைந்து, மெயின் ரோட்டை தொட்டதும் வேகம் கூடியது.கீதா வீட்டிற்கு செல்லும் பாதையில் பைக்கை திருப்பினான் வசந்த்.

"டேய் வசந்த், ஏற்கனவே லேட்டு..இன்னைக்கும் சுத்திட்டு தான் போகனுமா? இப்ப அவ ஸ்கூல்ல இருப்பாடா"..

"பைக்ல தான போறோம்.. சீக்கிரம் போயிடலாம்டா"..

அவர்கள் கீதா வீட்டை நெருங்கிய போது, பைக் வேகம் குறைந்தது.கீதா வீட்டு பைக் ஸ்டானட் காலியாக இருக்கவே, பைக் வேகம் கூடியது.


பின்னாலிருந்த சுந்தர்,
"நம்ம பேச்ச எவன் கேக்குறான்.."

பைக், ஸ்கூல் காம்பவுண்டை நெருங்கியது.பின்னாலிருந்த சுந்தர், ஸ்கூல் வாசலில் இருந்த பெரிய போர்டை காட்டி,

"இங்க பாருடா மச்சி.. சும்மா சொல்லகூடாது.. ஜூனியர் பசங்க கலக்குறாங்க.."

"FAREWELL DAY - 2002", என்ற வாசகத்தை தாங்கி நின்றது அந்த போர்டு.

"ஆமாடா, போன வருஷம், நாம கூட இப்படி பன்னலையே.."

பைக்கை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு, வேகமாக ஆடிட்டோரியம் சென்றார்கள்.

சுந்தர் சந்தோஷமாக, "டேய், பொன்னுங்க எல்லம் சேலை கட்டி வந்திருகாங்கடா.."

இவர்களைப் பார்த்த மாணவர் கூட்டம்,"டேய்.. வந்துடாய்ங்கடா.. வசந்தா, ஏண்டா லேட்டு?"..

கேள்வியை காதில் வாங்கியவன், பதில் கூறாமல், கீதாவைத் தேடினான்.

"அத, நான் சொல்றேன் மச்சி" என்று உள்ளே வந்தான் சுந்தார்.

மாணவர் கூட்டம் சந்தோஷமாக "சொல்லுடா, லவ் மேட்டரா?"

"அது ஒன்னுமில்ல மச்சி, சென்னையில் இருக்கிற எங்க மாமா வீட்டு பைப்புல தண்ணி வரலயாம்...அதனால.. எங்க மாமா.." என்று, சுந்தர் வாய்க்கு வந்த கதை சொல்ல, முறைத்தது மாணவர் கூட்டம்.

சுந்தர் அவர்களை சமாளித்து கொண்டிருந்தான்.

அங்கிருந்து விலக நினைத்த வசந்த் முதுகில் யாரோ தட்ட, திரும்பினான்.

"இப்பதான் வந்தியா, உன்னைத் தான் தேடிட்டு இருந்தேன்" என்றாள் கீதா.

வசந்தகால வானாய் நீலப் பட்டுடுத்தி,
கருநீல மேகமாய் கேசம் காற்றிலாட,
விண் மீனாய் மலர்களைத் தாங்கி,
மழைத் துளியாய் புன்னகைத் ததும்பும்,
பொன் நிலவாய் இருந்தவளைப் பார்த்தவன்,
தன் எடை முழுதும் தொலைத்து
காற்றில் மிதந்தான் சிறகாய்.

"என்னாச்சுடா?.." என்பது போல் அவளது விழிகள் வினா எழுப்ப,

சிறிது மவுனத்திற்கு பிறகு, "நானும் உன்னைத் தான் தேடிட்டு இருந்தேன்" என்றான்.

"சரி.. வா, அங்கே போய் பேசலாம்" என்றவள், ஆடிட்டோரியம் வெளியே இருந்த மரத்தடிக்கு அவனை அழைத்து வந்தாள்.

"நீ சேலையில் ரொம்ப அழகா இருக்க, தெரியுமா?"..

"தேங்கஸ் டா"..

"அத விட முக்கியாமா, இன்னைக்கு நீ ரொம்ப சந்தோஷமா இருக்க, என்ன விசேஷம்?"..

"அதை சொல்லத்தான், உன்னைத் தேடிட்டு இருந்தேன்"

வெகுநாட்களாக, சொல்ல நினைத்ததை இன்று சொல்லிவிட வேண்டுமென்று நினைத்தவன்,
"நானும், ஒரு விஷயம் சொல்லனும்னுதான் உன்னைத் தேடிட்டு இருந்தேன்"

"அப்போ, நீயே முதல்ல சொல்லுடா"..

காற்றில் மிதந்தவாறே,தான் சொல்ல வந்ததை,
மனதில் வெள்ளோட்டம் பார்த்துவிட்டு,
சொல்ல முற்பட்டவன், நிறுத்திவிட்டு.. அவளைப் பார்த்தான்.


-மீண்டும் காதலிப்போம்

4 comments:

Vathsan said...

Kavithai Super!!! I can't describe how much i enjoyed while reading this!!!!! Super Karpanai.... Arumaiyana Varthaigal....

Last 2 lines, no words at all to praise !!!!!!!!!!! Too good ..

தமிழ் தாசன் said...

vathsa,

much words da..

Thanks..

Suga said...

Kavithai miga arumai , full of blues :-)!!

தமிழ் தாசன் said...

suganthi,

//Kavithai miga arumai , full of blues :-)!!//

Thanks!!! :)