
ஓர் மழை நாளில்,
ஒளி மங்கிய நிலவொளியில்,
ஓர் குடையில் - பத்தில்
ஓர் காத தூர நடந்தோம்,
ஆழியின் அருகே.
அழகின் அர்த்தம் விளங்கிற்று,
அந்த அழகிய அந்தியில்.
ஆழியின் அமைதியை கலைத்து
களித்த, கனத்த காற்று,
பெண் அவளை கடந்த பொழுது,
பணிந்து பண் ஆனது.
அந்நிகழ்வை நோக்கியவன்
நெகிழ்ந்தேன் அக்கணமே.
குளிர் காற்றில் கலந்த,
மழைத் துளிகள் தீண்ட,
வெட்கத்தில் சிணுங்கினாள்.
முதலில் மெய்மறந்தேன்.
பின்பு, பணிந்தே போனேன்
பேதை காற்றாய்.
எனது நாட்குறிப்பேட்டில்,
"ஓர் மழை நாள்" மருவி
"ஓர் அழகிய மழை நாள்" என்றானது.
5 comments:
உன் அருமை தமிழ் படித்து நானும் எழுதுகிறேன் சிறு கவிதைகளை....
இதுவரை படித்ததில் மெய்மறக்க செய்தது இந்த கவிதை
எனது மனதில் மழைக்காலத்திர்க்கு ஓர் இனிய எண்ணம் எப்போதும் உண்டு
அதை வார்த்தைகளாய் பார்த்து மகிழ்கிறேன் இங்கு
நண்பா நீ மேலும் எழுதவேண்டும் அதை நான் புத்தகமாக்க முயல்கிறேன்
நீண்ட நாட்களுக்கு பிறகு,மீண்டும் பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.மேலும் பல நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
விட்டுப்போன அந்த தொடரை தொடரவும்.
அன்புடன்,
திரு.
selvaganapathy..
//எனது மனதில் மழைக்காலத்திர்க்கு ஓர் இனிய எண்ணம் எப்போதும் உண்டு
அதை வார்த்தைகளாய் பார்த்து மகிழ்கிறேன் இங்கு//
:) நெகிழ்ந்தேன்..
திரு,
//மேலும் பல நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.விட்டுப்போன அந்த தொடரை தொடரவும்//
நிச்சயமாக முயற்சி செய்கிறேன்...
வாழ்த்துகளுக்கு நன்றி. :)
முடியல.!!!!!!!!! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆ..!!!!
Mike
Post a Comment