
வழக்கம் போல் காரைக்குடி மெஸ்-இல் சாப்பிட்டு வந்தவன், computer-இல் பாடல்களைப் பாடவிட்டு, கட்டிலில் படித்திருந்தான்.
"நான் தேடும் செவ்வந்தி பூவிது.." முதல் பாடலானது.
கொஞ்சம் நேரம் கழித்து வந்தான் சுந்தர்.
"டேய் வசந்த்"..
"ம்ம்ம்"..
"சாப்டாச்சாடா?"..
"ம்ம்ம்"..
"காலேஜ்-ல பிராக்டிக்கல் எக்ஸாம் டா.. செம கடி.. அதான் லேட்.."
"ம்ம்ம்"..
"என்னடா உடம்பு சரியில்லையா?"..
"அப்படியெல்லம் ஒன்னும் இல்ல டா"..
"அப்புறம் ஏன் மொனங்குற... சரி.. நாளைக்கு எங்க காலேஜ் லீவுடா.. நீயும் கட் அடிச்சிடு.. படத்துக்கு போலாம்.."
"நாளைக்கு நான் கட் தான்டா, ஆனா மேட்டுப்பாளையம் போறேன்.."
"மேட்டுப்பாளையமா?.. எதுக்கு?"
"கீதாவை பாக்க போறேன்"
"நம்ம ஸ்கூல்ல படிச்ச கீதாவா?.. அங்க தான் படிக்கிறாளா?.. யாருடா சொன்னா?"
"அவதான் சொன்னா.. இன்னைக்கு phone பன்னா"
"அதான் ஒரே காதல் பாட்டா ஒடுதா.. அது சரி.. "
"அப்படி இல்லடா.. சரி.. . எதுக்குடா வரசொல்லிருப்பா?.."
"அதுவா.. அது ஒன்னுமில்லடா மச்சி.. ஸ்கூல்ல படிக்கும் போது ஒரு நாள் இருபது ரூவா வாங்கினல்ல.. அத கேட்கத்தான் வரசொல்லிருப்பா"
"விளையாடதடா.."என்னை பார்க்கனும் போல இருக்கு"னு சொன்னாடா.."
"சரி... போய் பாரு.."
"டேய்.. என்ன டிரஸ் போட்டு போக?"
"ஏன்டா இம்சை பன்ற.. பொன்னு பார்க்கவ போற?.. ஏதோ ஒன்னு போட்டு போடா.."
"ம்ம்ம்"..
"கண்டிப்பா ஏதாவது ஒரு டிரஸ் போட்டு போடா..மறந்திட்டுப் போயிட போற.. "
சட்டை மாற்றிக்கொண்டு வெளியே கிளம்பினான் சுந்தர்.
"எங்கடா போற?"..
"டெய்லி நைட்டு இரண்டு தோசை சாப்பிட்டா, ரொம்ப நல்லதுனு எங்கப்பா சொன்னாருடா.. அதான் சாப்பிட போறேன்.."
"யாருக்கு நல்லது.. மெஸ் ஒனருக்கா?"..
"அத.. வந்து சொல்றேன்.. மெஸ் பூட்டிட போறான்"..
சுந்தர் போனதும், சிகரெட்டை பற்ற வைத்தான் வசந்த்.
"கண்மனி.. அன்போட காதலன் நான்".. computer-இல் கமல் பாட ஆரம்பித்தார்..
புன்னகைத்தவாறே புகைத்து கொண்டிருந்தான்.
புகை காற்றில் கரைந்தது.அவன் காலத்தில் கரைந்தான்.
---மூன்று வருடங்களுக்கு முன்---
-மீண்டும் காதலிப்போம்