
பஞ்ச பூதங்களே....
உங்களுக்குள் என்ன போட்டியா?
யார் மீது "பரணி" பாடவேண்டும் என்று.
மூங்கில் காடுகளில் தலைவிரித்தாடுகிறாள் ஒருத்தி.
"ரிக்டர்" அளவில் ஆடிக்காட்டுகிறாள் ஒருத்தி.
வாடைக் காற்றில் பாடைக் கட்டுகிறாள் ஒருத்தி.
"ஒசோன்" ஓட்டையால் உலக வெப்பம் உயர்த்துகிறாள் ஒருத்தி.
ஆழிப்பேரலையாகவும் ஊழிப்பெருவெள்ளமாகவும்
வந்து வென்றாள் தலைவி ஒருத்தி.
அவளுக்கு,
எனது பானியில்
"பரணி" பாடுகின்றேன்.
கடல் கொண்ட தமிழ்நாடு - இன்று
கடல் உண்ட தமிழ்நாடு.
பேரலையே...
நீ நீருக்கடியில் செய்த
அணு ஆயுத சோதனையா?
சோதணையின் வேதனையே
பல போதனைகள் தந்தாயிற்று..
வேண்டாம் மற்றொன்று..
"அமைதி" க்கு சான்றான கடலை
"சமாதி" க்கு உவமேயம் ஆக்கினாய்.
நல்லோர் எழுச்சி மகிழ்ச்சிதானே..
உன் எழுச்சி மட்டும் வீழ்ச்சியானதே.
உப்பிட்ட உன்னை
உள்ளவும் நினைத்தோம்.
நீயோ..
மனித அறுவடை செய்து,
மானுடம் சிந்திய கண்ணீரில்
உப்பு சமைக்கின்றாய்
வேண்டாம்
அந்தஉப்பு எங்களுக்கு.
காலி குடங்களை நிறப்பத்தான் கேட்டோம்.
இடுகாட்டில் பல நீர்குடங்களை ஏன் உடைத்தாய்.
வாடிய பயிரை காக்கத்தான் கேட்டோம்.
மனித வேரை ஏன் அறுத்தாய்.
பள்ளியின் நெருப்பை அனைக்கத்தான் கேட்டோம்.
பள்ளியில் பற்றியதைகொள்ளியி ஏன் ஏற்றினாய்.
கடல் அன்னை என்றோம்.
பூகம்பத்தின் பினாமி என்கிறாய்.
மணல் வீடு அழித்து விளையாடு என்றோம்.
காரை வீடும் வேண்டும் என்கிறாய்.
"விடாமுயற்சி" க்கு அலை என்றோம்.
"மூச்சை விடு" என்கிறாய்.
பூமியின், மூன்றில் இரண்டுபங்கு
இடஒதிக்கீடு என்றோம்.
போதாதென்று கடலை விட்டு
வெளிநடப்பு செய்கிறாய்.
ஆயிரம் கொன்றால் அரைவைத்தியம்
என்பதை தவறாய் உணர்ந்து,
முழுவைத்தியத்தையும் அரைநொடியில்
கற்றாயோ...
பழைய பாடம் அழித்து
புதிய படாம் புகற்றினாய்.
சாது மிரண்டாலும் காடு கொள்ளும் - கொள்ளாதே
கடல் மிரண்டால் நாடு.
கடல் கொண்ட தமிழ்நாடு - இன்று
கடல் உண்ட தமிழ்நாடு.
- தமிழ் தாசன்
4 comments:
Anbulla Suresh,
Un tamizh pattrukku, en nandrikal..
thodarndu pala pathipukkal velieda,
en vazhthukkal..
venki
பதிவுக்கு வந்தமைக்கு நன்றி.
ரிக்டர், இட ஒதுக்கீடு, வைத்தியம் போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்திய விதங்கள் அருமை. தொடருங்கள்.
-ஞானசேகர்
பதிவுக்கு வந்தமைக்கு நன்றி
//வார்த்தைகளை உபயோகப்படுத்திய விதங்கள் அருமை//
மிக்க நன்றி.
Post a Comment